Wednesday, March 13, 2019

ராகு,கேது பெயர்ச்சி


ராகு,கேது பெயர்ச்சி
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 13.2.19  புதன்கிழமை இரவு,ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.ராகுபகவான் கடக ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கும்,கேது பகவான், மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் மதியம் 1.25 மணிக்கு பெயர்ச்சி  அடைவதை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,நவகிரகங்களில்  ராகு, கேதுவிற்கு சிறப்பு அலங்காரமும் செய்விக்கப் பெற்றிருந்தன. தொடர்ந்து நவ கிரகங்களுக்கான கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது.யாககுண்டத்தில் அனைவரும் வரிசையாக வந்து வன்னி சமித்து,கொள்.கருப்பு உளுந்து தானியங்களை போட்டனர்.கலச நீர் நவ கிரகங்களுக்கு தெளித்தபின் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது. .ராகு,கேதுவின் அருட் பார்வை, 12 ராசிகளுக்கான பெயர்ச்சி பலன்கள் மற்றும் ஏற்ற வேண்டிய தீப எண்ணிக்கைகள் கூறப்பட்டன.பக்தர்களால் அத் தீபங்கள் ஏற்றப்பட்டன.சிறப்பு அர்ச்சனையும்மஹா தீபாராதனையும் நடை பெற்றன.இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு தரிசித்தனர். ராகு,கேது விற்கான உளுந்து,கொள்ளு சுண்டல்,மற்றும் பல பிரசாதங்கள் வழங்கப்பட்டன.வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய பௌர்ணமி அமாவாசைக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதே போன்று அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் இறைபணி மன்றம் சார்பில்  ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.மங்கலம் சாலையிலுள்ள பச்சை அம்மன் கோயிலிலும் ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Tuesday, March 12, 2019

இலவசகண் பரிசோதனை முகாம்












இலவசகண் பரிசோதனை முகாம்  

மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் 2-3-19 சனிக்கிழமை காலை மணிமுதல் மதியம் 2 மணிவரை அங்காடிவீதியிலுள்ள ஆர்.ஏ.பி திருமணமண்டபத்தில், விழுப்புரம் மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம்,அவலூர்பேட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஏஜன்சீஸ், பெட்ரோல்பங்க்,ஸ்ரீ வரலட்சுமி ஸ்டோர்ஸ்,கன்னிகாபரமேஸ்வரி சூப்பர் மார்க்கெட் மற்றும் பாண்டிச்சேரி அரவிந் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது.பாண்டிச்சேரி அரவிந் கண் மருத்துவமனை,கண் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.இதில் பயனாளிகளின் பெயர் பதிவு முதல் அனைத்து பரிசோதனைகளும் கணினிகள் மூலம் நடைபெற்றன. கையடக்க மற்றும் மடிக்கணினிகள் பயன்படுத்தப்பட்டன.கண் புரை,சர்க்கரை நோய்நீர்அழுத்தம்,ரத்த அழுத்தம்,ரத்தபரிசோதனை கிட்டதூரப்பார்வை குறைபாடு, வெள்ளெழுத்து, கருவிழிப்புண், போன்றவற்றிற்கு சிகிச்சைஅளித்து மருந்துகள் வழங்கப்பட்டன.முகாமிற்கு வந்திருந்த சிறப்பு மருத்துவர்கள்,செவிலியர்கள்,குறைபாடு உள்ளவர்களை நன்கு பரிசோதித்து தேவையானவற்றை செய்தனர் மற்றும் அவலூர்பேட்டை லயன்ஸ், லயனஸ், லியோசங்கங்களின் தலைவர், செயலர்,பொருளர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு முகாம் சிறக்கச்செய்தனர் அவலூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் காலை முதலே நீண்ட வரிசயில் காத்திருந்தனர்.தரமானகண்ணாடிகள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டன. பரிசோதனை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 298 கண் அறுவை சிகிச்சைக்கு தகுதியான 88 நபர்கள் பாண்டிச்சேரி அரவிந்கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.