இலவசகண் பரிசோதனை முகாம்
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் 2-3-19 சனிக்கிழமை காலை 8 மணிமுதல்
மதியம் 2 மணிவரை அங்காடிவீதியிலுள்ள ஆர்.ஏ.பி திருமணமண்டபத்தில், விழுப்புரம் மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம்,அவலூர்பேட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஏஜன்சீஸ், பெட்ரோல்பங்க்,ஸ்ரீ
வரலட்சுமி ஸ்டோர்ஸ்,கன்னிகாபரமேஸ்வரி சூப்பர் மார்க்கெட் மற்றும் பாண்டிச்சேரி அரவிந் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண்
பரிசோதனை முகாம் நடைபெற்றது.பாண்டிச்சேரி அரவிந் கண் மருத்துவமனை,கண் மருத்துவர்கள்
சிகிச்சை அளித்தனர்.இதில் பயனாளிகளின் பெயர் பதிவு முதல்
அனைத்து பரிசோதனைகளும் கணினிகள் மூலம் நடைபெற்றன. கையடக்க
மற்றும் மடிக்கணினிகள் பயன்படுத்தப்பட்டன.கண் புரை,சர்க்கரை நோய், நீர்அழுத்தம்,ரத்த அழுத்தம்,ரத்தபரிசோதனை கிட்ட, தூரப்பார்வை குறைபாடு, வெள்ளெழுத்து, கருவிழிப்புண், போன்றவற்றிற்கு சிகிச்சைஅளித்து மருந்துகள்
வழங்கப்பட்டன.முகாமிற்கு
வந்திருந்த சிறப்பு மருத்துவர்கள்,செவிலியர்கள்,குறைபாடு உள்ளவர்களை நன்கு பரிசோதித்து தேவையானவற்றை செய்தனர் மற்றும் அவலூர்பேட்டை லயன்ஸ், லயனஸ், லியோசங்கங்களின்
தலைவர், செயலர்,பொருளர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு
முகாம் சிறக்கச்செய்தனர் அவலூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் காலை முதலே
நீண்ட வரிசயில் காத்திருந்தனர்.தரமானகண்ணாடிகள்
குறைந்த விலைக்கு வழங்கப்பட்டன. பரிசோதனை செய்தவர்களின்
மொத்த எண்ணிக்கை 298 கண் அறுவை சிகிச்சைக்கு தகுதியான 88 நபர்கள் பாண்டிச்சேரி அரவிந்கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.











No comments:
Post a Comment