Sunday, February 24, 2019
Sunday, February 17, 2019
காளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
மேல்மலையனூர்
வட்டம் அவலூர்பேட்டை,ஊரின் கிழக்கு எல்லையில்
உள்ள காளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன
மகா கும்பாபிஷேகம் 10.2.19 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்ளாக
சிறப்பாக
நடைபெற்றது.இதைமுன்னிட்டு 9.2.19 காலை 8 மணிக்கு
மங்கள இசை,அனுக்ஜை,கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமங்ககள்,நூதனபிம்பஅஷ்டாத கிரியை,கோபூஜை,சன்ய
பூஜை தீபாராதனை,பிரசாதங்கள் வழங்குதல் நடைபெற்றன.மாலை 5 மணி வாஸ்த்து சாந்தி,பிரவேசபலிமிருத்சங்கிரகணம்,அங்குரார்ப்பணம்,
ரக்ஷாபந்தனம்,கும்ப அலங்காரம்,காலகர்ஷணம்.இரவு 7 மணி முதல் கால யாகபூஜை,யந்திரஸ்தாபிதம்,நவரத்தினஸ்தாபிதம்,வேதபாராயணம்.இரவு
9 மணி பூர்ணாகுதி,மகா தீபாராதனை. அஷ்டபந்தன சர்பனம்,பிரசாதங்கள் வழங்குதல்.10.2.19
ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மங்கள இசை,நாடி சந்தானம்,பர்சாஹூதி,
2 வது கால விசேஷ மூலிகை திரவியம் ஹோமங்கள், மகா பூர்ணாகுதி,மகா தீபாராதனை,மகா பூர்ணாகுதி,மகா
தீபாராதனை,9.30 மணிக்கு தீர்த்த கும்ப புறப்பாடு.10.30 மணிக்கு காளி அம்மன்,காலபைரவர்,
வியாக்கியான தட்சணாமூர்த்தி,மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு கும்பாபிஷேகம்.மூலவர்,காலபைரவர்,தட்சணாமூர்த்தி
கோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பகலச நீர் ஊற்றப்பட்டன.தொடந்து.மகா அபிஷேகம்,
அலங்காரம் செயப்பட்டு அர்சனைகள்செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும்
ஐயப்பா சேவா சங்கம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன..உள்ளூர் வெளியூர் பக்தர்கள்
திரளாகக் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை சீனுவாச குருக்கள் அவர்கள் தலமையில் சிவாச்சரியார்கள்
ஆகமமுறைப்படி சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினர். இன்று முதல் மண்டலாபிஷேக பூஜைகள்
நடைபெறும் என தெரிவித்தனர்.காவல்துறையினரின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது
மாலை 6 மணிக்குஅங்க்காடி வீதியில்
ககுடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களா? ஆண்களா? என்ற தலைப்பில் நகைச்சுவைப்
பட்டி மன்றம் நடைபெற்றது..நடுவர் ராமலிங்கம் அவர்கள்,.பெண்களே என்றதலைப்பில் செல்வி
தாமரை அவர்கள்,ஆண்களே என்றதலைப்பில்பேராசிரியர் வேதா அவர்கள்,இரவு 8 மணிக்கு காளி அம்மன்
சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
.விழா நிகழ்வுகளை தலைவர் ராமலிங்கம்,செயலர் நடராஜன்,பொருளர் கோபாலகிருஷ்ணன்,அர்ச்சகர்
சரவணன்,விழாக்குழு மற்றும் கிராம பொது மக்கள் முன்னின்று
சிறப்புற செய்தனர்.



















Friday, February 8, 2019
குடியரசு தினவிழா
குடியரசு
தினவிழா
மேல்மலையனூர்
வட்டம் அவலூர்பேட்டை அங்காடி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு
26.1.19 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் சங்கம் சார்பில், ஸ்ரீ சரவணா நகைஅங்காடி பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் சங்கத்தலைவர் புருடோத்துமன் அவர்கள் தலைமை வகிக்க,70ஆம் ஆண்டு
குடியரசு தினவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில்
தமிழ் சங்க
துணைசெயலர் சிவநேசன் ஆலோசகர் ஏழுமலை, வள்ளலார் திருச்சபை தலைவர் செயராமன்,மரம் நடுவோர் சங்கத்ச்சார்ந்த செல்வராஜ்,மகாராஜன், ஊர் முக்கியஸ்தர்கள்,பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.முன்னதாக காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்து அங்கிருந்த
அனைவருக்கும் .அடகு
அங்காடி செல்வராஜ் இனிப்பு வழங்கினார்.நெப்போலியன் மற்றும் சிவக்குமார்
நிகழ்வை சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர்.
இதேபோல் காலை,பல்வேறு
அமைப்புகள் சார்பில் காந்தி
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.ஆண்கள்,பெண்கள்
ஒன்றிய ஆரம்பப் பள் ளிகள்,அரசு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள்,ராஜா தேசிங்கு வித்யாலயா,சாரதாவித்யாலயா,சோபி
கான்வென்ட் ஆகிய பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சிமன்ற பெற்றோர் ஆசிரியர்
கழக, கிராம கல்வி குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,பள்ளிகளில் கலை நிகழ்சிகள்
நடைபெற்றன.
ஊராட்சிமன்றம்,காவல்நிலையம்,மின்சார வாரியம்,கிளைநூலகம்,பொது
இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு
தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.






வாரசந்தை ஏலம்
வாரசந்தை ஏலம்
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில்
இன்று 7.2.19
வியாழக்கிழமை மதியம் 12.00 மணிக்கு அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற
அலுவலக வளாகத்தில்,ஊரின்
கிழக்கு எல்லையில் உள்ள பெரிய குளக்கரையில் புதன் கிழமைதோறும் நடந்து
கொண்டிருக்கும் ஊராட்சியின் வார சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமத்திற்கான
பகிரங்க ஏலம்,தனி
அலுவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
ஜெகன்நாதன், அவர்கள் தலமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், நடராஜன்,பிரியாசங்கர் {தணிக்கை},சேகர்,பாலசுப்பிரமணி,கிராம
நிர்வாக அலுவலர், அவலூர்பேட்டை ஊராட்சி செயலர் வெங்கடேசன்,மற்றும் ஏலத்திற்கான
பிணைத்தொகை செலுத்தியவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏலம்
அமைதியாக நடைபெற, அவலூர்பேட்டை காவல்
துறையினர் ஏலம் நடக்கும் இடத்தில் பாதுகாபில் பெருமளவில் ஈடுபட்டிருந்தனர்
ஏலம் கேட்பதற்காக 14 நபர்கள் விதிமுறைகளின்படி ரூபாய்
1 லட்சத்திற்கான வரைவோலை கொடுத்திருந்தனர்.,ஏலத்திற்கான விதிமுறைகள்,சுங்க கட்டணங்கள் பற்றி
கூறியபின்,ஏலத்தின்மூலம் ஊராட்சிக்கு கிடைக்கும் தொகையை
ஊரின் அத்தியாச தேவைகளுக்கு செலவுசெய்ய வேண்டும் எனவும் சந்தையில் கடைகள்
வைப்பதற்காக கட்டப்பட்ட மேடையில் கடைகள்ம் வைக்காமல் சாலையின் இரு மருங்கிலும்
பொக்குவரத்துக்கு இடையூராக கடைகள் வைக்கப்படுகின்றன என கேட்கப்பட்டது.இதன்மேல்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.மதியம் 12.00 மணிக்கு
ஏலம் துவங்கியது அரசு மதிப்பு 25 லட்சம் என அறிவித்து ஏலம்
துவங்கி 14 பேர் தொகை உயர்த்திக்கொண்டேவர கோவில்புரையூர் பள்ள ஊர் பச்சையப்பன் என்பவர் 32 லட்சத்து 15 ஆயிரம் என கேட்க வேறு
கேள்வி இல்லாததால் நடப்பாண்டிற்கான சுங்கம் வசூலிக்கும் உரிமம்,அன்னாருக்கே என,அரசு விதித்த
கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கமாட்டேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று,ஏலத்தொகை ஜி எஸ் டி வரி 18
சதவீதத்துடன் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்டது.ஏலத்தொகை
கடந்த ஆண்டைவிட 3 லட்சத்து 2 ஆயிரம் அதிகம். கடந்த
ஆண்டு சந்தை ஏலம் 29 லட்சத்து 13 ஆயிரம். அவலூர்பேட்டையில் வாரந்தோறும் புதன் கிழமை நடைபெறும்,கால் நடைகளுக்கான
சந்தை மிகப்பிரபலமானது.காய்கறிகள் வாங்க காலை
முதல் இரவு 8 மணிவரை நீண்ட தொலை
கிராமங்களிலிருந்து திருவிழாவிற்கு வந்து செல்வதுபோல் வருவர் என்பதும் ஒரு சிறப்பு.
படிவிழா மற்றும் தை அமாவாசை
படிவிழாமேல்மலையனூர்வட்டம் அவலூர்பேட்டை
சித்தகிரி முருகன் கோயில் படிவிழா இன்று 4.2.19 திங்கட்கிழமை. வெகு சிறப்பாக நடைபெற்றது.இதைமுன்னிட்டு காலை 7 மணிக்கு சாமுண்டீஸ்வரி
அம்மன் கோயில் முன்புறம் புலவன்பாடிசரவணன் அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.தொடர்ந்து கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தெள்ளாரம்பட்டு, ஞானசேகரன் அவர்கள்
தலைமையில் கரடிக்குப்பம் மற்றும் சிதம்பரநாதன்,ஐயாதுரை அவர்கள் தலைமையில் அவலூர்பேட்டை
பஜனைக்குழுக்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலை வலம்வந்து,இன்னிசைக்கருவிகளுடன் தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,இறை
நாமாவளிகள் இசையுடன் பாடிக்கொண்டு மாடவீதிகள் வழியாக சித்தகிரி அடிவாரத்தை அடைந்தனர்.பின்னர்
முருகன் கோயிலுக்குச்செல்லும் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள்பூசி, குங்குமம்,பூ வைத்து தெய்வத்திருப்பாடல்
பாடி,தூப தீபம் காட்டி வள்ளி தேவசேனா சமேத முருகன் சன்னதியை அடைந்தனர்.இதில் திரளான
பக்தர்கள் கலந்துகொண்டு உடன் வந்தனர்.காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள். செய்து சிறப்பு
அலங்காரம் செயப்பட்டிருந்த வள்ளி தேவசேனா சமேத முருகனுக்கு அர்சனைகள் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும்
பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா நிகழ்வுகளை
படிபூஜை விழாக்குழு அவலூர்பேட்டை தமிழ்
சங்கம்,வள்ளலார் சங்கம்,சிவம் ஆப்டிகல்ஸ்,
மற்றும் கிராம பொது மக்கள் முன்னின்று சிறப்புற செய்தனர். மற்றும் தை
அமாவாசை
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை,
4.2.119 திங்கட்கிழமை காலை ஊரின் மேற்கு எல்லையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அஷேக ஆராதனைகள் செய்து மஞ்சள்
காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை
3 மணிக்கு நாயுடு சமுதாயத்தினர் ஆலயத்தில் பொங்கல் வைத்தனர். மாலை 4 மணிக்கு
பக்கத்து கிராமங்களிலிருந்து பிடித்துவரப்பட்ட கோயில் எருதுகள் 3 ஒன்றன்பின் ஒன்றாக பெரிய வட கயிற்றால் கட்டி அரச மரத்தடியில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த அர்சுனன்,திரௌபதி போத்துராஜா இறை மூர்த்தங்களை சுற்றிவந்தபின் இருபுறமும் பிடித்துக்கொள்ள எருதின் முன்புறம் பறை ஒலி எழுப்ப சிவப்பு,கருப்பு
வண்ணத்துணி மிதிவண்டி சக்கரம் இவைகளைகாட்ட எருது பாய்ச்சலுடன் வந்தது.இதை திரளான மக்கள் கண்டு களித்தனர்.திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 9.30 மணிக்கு
சிறப்பு அலங்காரத்தில் அர்சுனன், திரௌபதி நாதஸ்வர இன்னிசையுடன் திருவீதி உலா நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில்
இன்று திங்கட்கிழமை வார வழிபாடும் தொடர்ந்து தை
அமாவாசையை முன்னிட்டு ஆலய முன் மண்டபத்தில் ஸ்ரீ சக்கரம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.பூஜைகள் முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, பூஜையை பெளர்ணமி, அமாவாசைக்குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்.
மேலும் இன்று
மாலை அங்காடி வீதியிலுள்ள
முத்தாலம்மன்,மாரியம்மன் ,கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு
8 மணிக்கு, ஊஞ்சல்சேவைக்குப் பின் மகாதீபாராதனை நடைபெற்றது அனைவருக் கும் பிரசாதம் வழங்கப்பட்டது பூஜயில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்வை கோயில் நிவாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்
Subscribe to:
Posts (Atom)
























































