வாரசந்தை ஏலம்
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில்
இன்று 7.2.19
வியாழக்கிழமை மதியம் 12.00 மணிக்கு அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற
அலுவலக வளாகத்தில்,ஊரின்
கிழக்கு எல்லையில் உள்ள பெரிய குளக்கரையில் புதன் கிழமைதோறும் நடந்து
கொண்டிருக்கும் ஊராட்சியின் வார சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமத்திற்கான
பகிரங்க ஏலம்,தனி
அலுவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
ஜெகன்நாதன், அவர்கள் தலமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், நடராஜன்,பிரியாசங்கர் {தணிக்கை},சேகர்,பாலசுப்பிரமணி,கிராம
நிர்வாக அலுவலர், அவலூர்பேட்டை ஊராட்சி செயலர் வெங்கடேசன்,மற்றும் ஏலத்திற்கான
பிணைத்தொகை செலுத்தியவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏலம்
அமைதியாக நடைபெற, அவலூர்பேட்டை காவல்
துறையினர் ஏலம் நடக்கும் இடத்தில் பாதுகாபில் பெருமளவில் ஈடுபட்டிருந்தனர்
ஏலம் கேட்பதற்காக 14 நபர்கள் விதிமுறைகளின்படி ரூபாய்
1 லட்சத்திற்கான வரைவோலை கொடுத்திருந்தனர்.,ஏலத்திற்கான விதிமுறைகள்,சுங்க கட்டணங்கள் பற்றி
கூறியபின்,ஏலத்தின்மூலம் ஊராட்சிக்கு கிடைக்கும் தொகையை
ஊரின் அத்தியாச தேவைகளுக்கு செலவுசெய்ய வேண்டும் எனவும் சந்தையில் கடைகள்
வைப்பதற்காக கட்டப்பட்ட மேடையில் கடைகள்ம் வைக்காமல் சாலையின் இரு மருங்கிலும்
பொக்குவரத்துக்கு இடையூராக கடைகள் வைக்கப்படுகின்றன என கேட்கப்பட்டது.இதன்மேல்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.மதியம் 12.00 மணிக்கு
ஏலம் துவங்கியது அரசு மதிப்பு 25 லட்சம் என அறிவித்து ஏலம்
துவங்கி 14 பேர் தொகை உயர்த்திக்கொண்டேவர கோவில்புரையூர் பள்ள ஊர் பச்சையப்பன் என்பவர் 32 லட்சத்து 15 ஆயிரம் என கேட்க வேறு
கேள்வி இல்லாததால் நடப்பாண்டிற்கான சுங்கம் வசூலிக்கும் உரிமம்,அன்னாருக்கே என,அரசு விதித்த
கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கமாட்டேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று,ஏலத்தொகை ஜி எஸ் டி வரி 18
சதவீதத்துடன் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்டது.ஏலத்தொகை
கடந்த ஆண்டைவிட 3 லட்சத்து 2 ஆயிரம் அதிகம். கடந்த
ஆண்டு சந்தை ஏலம் 29 லட்சத்து 13 ஆயிரம். அவலூர்பேட்டையில் வாரந்தோறும் புதன் கிழமை நடைபெறும்,கால் நடைகளுக்கான
சந்தை மிகப்பிரபலமானது.காய்கறிகள் வாங்க காலை
முதல் இரவு 8 மணிவரை நீண்ட தொலை
கிராமங்களிலிருந்து திருவிழாவிற்கு வந்து செல்வதுபோல் வருவர் என்பதும் ஒரு சிறப்பு.






No comments:
Post a Comment