Friday, February 8, 2019

படிவிழா மற்றும் தை அமாவாசை


படிவிழாமேல்மலையனூர்வட்டம் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோயில் படிவிழா இன்று 4.2.19 திங்கட்கிழமை. வெகு சிறப்பாக நடைபெற்றது.இதைமுன்னிட்டு காலை 7 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் முன்புறம் புலவன்பாடிசரவணன் அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.தொடர்ந்து கிருஷ்ணன்  அவர்கள் தலைமையில் தெள்ளாரம்பட்டு, ஞானசேகரன் அவர்கள் தலைமையில் கரடிக்குப்பம் மற்றும் சிதம்பரநாதன்,ஐயாதுரை அவர்கள் தலைமையில் அவலூர்பேட்டை பஜனைக்குழுக்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலை வலம்வந்து,இன்னிசைக்கருவிகளுடன் தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,இறை நாமாவளிகள் இசையுடன் பாடிக்கொண்டு மாடவீதிகள் வழியாக சித்தகிரி அடிவாரத்தை அடைந்தனர்.பின்னர் முருகன் கோயிலுக்குச்செல்லும் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள்பூசி, குங்குமம்,பூ வைத்து தெய்வத்திருப்பாடல் பாடி,தூப தீபம் காட்டி வள்ளி தேவசேனா சமேத முருகன் சன்னதியை அடைந்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு உடன் வந்தனர்.காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள். செய்து சிறப்பு அலங்காரம் செயப்பட்டிருந்த வள்ளி தேவசேனா சமேத முருகனுக்கு அர்சனைகள் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா நிகழ்வுகளை படிபூஜை விழாக்குழு அவலூர்பேட்டை தமிழ் சங்கம்,வள்ளலார் சங்கம்,சிவம் ஆப்டிகல்ஸ், மற்றும் கிராம பொது மக்கள்  முன்னின்று சிறப்புற செய்தனர்.                                                    மற்றும் தை அமாவாசை

மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை, 4.2.119 திங்கட்கிழமை காலை ஊரின் மேற்கு எல்லையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அஷேக ஆராதனைகள் செய்து மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை 3 மணிக்கு நாயுடு சமுதாயத்தினர் ஆலயத்தில் பொங்கல் வைத்தனர். மாலை 4 மணிக்கு பக்கத்து கிராமங்களிலிருந்து பிடித்துவரப்பட்ட கோயில் எருதுகள் 3 ஒன்றன்பின் ஒன்றாக பெரிய வட கயிற்றால் கட்டி அரச மரத்தடியில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த அர்சுனன்,திரௌபதி போத்துராஜா இறை மூர்த்தங்களை சுற்றிவந்தபின் இருபுறமும் பிடித்துக்கொள்ள எருதின் முன்புறம் பறை ஒலி எழுப்ப சிவப்பு,கருப்பு வண்ணத்துணி மிதிவண்டி சக்கரம் இவைகளைகாட்ட எருது பாய்ச்சலுடன் வந்தது.இதை திரளான மக்கள் கண்டு களித்தனர்.திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்சுனன், திரௌபதி நாதஸ்வர இன்னிசையுடன் திருவீதி உலா நடைபெற்றது.                                                  இரவு 8 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இன்று திங்கட்கிழமை வார வழிபாடும் தொடர்ந்து  தை அமாவாசையை முன்னிட்டு ஆலய முன் மண்டபத்தில் ஸ்ரீ சக்கரம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.பூஜைகள் முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, பூஜையை பெளர்ணமி, அமாவாசைக்குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்.  மேலும் இன்று மாலை அங்காடி வீதியிலுள்ள
முத்தாலம்மன்,மாரியம்மன் ,கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்கு, ஊஞ்சல்சேவைக்குப் பின் மகாதீபாராதனை நடைபெற்றது அனைவருக் கும் பிரசாதம் வழங்கப்பட்டது பூஜயில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்வை கோயில் நிவாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்

   
ma

No comments:

Post a Comment