Friday, February 8, 2019

காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மேல்மலையனூர்வட்டம் அவலூர்பேட்டை மேற்கு எல்லையில் பெத்தான் குளக்கரையின் மேற்புறம் புதிதாகக்கட்டியுள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் நவக்கிரக கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 27.1.19 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள்ளாக சிறப்பாக நடைபெற்றது.இதைமுன்னிட்டு 25.1.19 வெள்ளிக்கிழமை  இரவு முதல்கால யாக பூஜை,பூர்ணாகுதி,மகா தீபாராதனை. 26.1.19 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு விசேஷ சந்தி,2 வது கால யாகபூஜை,நூதன விக்கிரகங்கள் பிம்ம சுத்தி அஷ்டகிறைய தஷாக்கள் காலை 11.30 மணி விசேஷ ஓமத்திரவிய ஓமம், மகா பூர்ணாகுதி,மகா தீபாராதனை,மகா பிரசாதங்கள் வழங்குதல்.மாலை 5 மணி பிம்ப பிரதிஷ்டை விசேஷ சந்தி,3 வது கால யாகபூஜை இரவு 9 மணி மகா பூர்ணாகுதி,மகா தீபாராதனை.27.1.19 ஞாயிற்றுக்கிழமை காலை நாதஸ்வர இன்னிசை 6 மணிக்கு கோபூஜை,தம்பதி பூஜை,4 வது கால யாக பூஜை நாடி சந்தானம்,தத்வார்ச்சனை, விசேஷ ஓமத்திரவிய ஓமம்,8.30 மணிக்கு மகா,பூர்ணாகுதி,மகா தீபாராதனை, மகா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம்,மகா தீபாராதனை, பிரசாதங்கள் வழங்குதல் நடைபெற்றன.யாக சாலையில்மேடையில் 6 பிரதான கலசங்கள் ஒவ்வொன்றின் முன்னும் யஒருயாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தன.மொத்தம் 510 கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன.உள்ளூர் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கண்க்கில் திரளாகக் கலந்து கொண்டனர்.மூன்று நிலை மூலவர் கோபுரம்.துவஜஸ்தப்பம் ஆகியவற்றிகு ஒரே நேரத்தில் கும்பகலச நீர் ஊற்றப்பட்டன.தொடந்து  காமாட்சி அம்மன்.சிம்ம வாகனம்,பலிபீடம் நவக்கிரகங்கள் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றன.சிறப்பு அலங்காரம் செயப்பட்டு அர்சனைகள் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.போளூர் கிருத்திகானந்த சிவாச்சாரிஎ அவலூர்பேட்டை,ரவணாம்பட்டு,கிளாகுப்பம் வன்னிய குல ஷத்திரியர்கள் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தினர். விழா நிகழ்வுகளை திருப் பணிக்குழு மற்றும் கிராம பொது மக்கள்  முன்னின்று சிறப்புற செய்தனர்.இன்று முதல் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் என தெரிவித்தனர்.காவல்துறையினரின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது.போளூர் கிருத்திகானந்த சிவாச்சரியார் அவர்கள் தலமையில் சிவாச்சரியார்கள் ஆகமமுறைப்படி சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினர்























No comments:

Post a Comment