குடியரசு
தினவிழா
மேல்மலையனூர்
வட்டம் அவலூர்பேட்டை அங்காடி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு
26.1.19 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் சங்கம் சார்பில், ஸ்ரீ சரவணா நகைஅங்காடி பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் சங்கத்தலைவர் புருடோத்துமன் அவர்கள் தலைமை வகிக்க,70ஆம் ஆண்டு
குடியரசு தினவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில்
தமிழ் சங்க
துணைசெயலர் சிவநேசன் ஆலோசகர் ஏழுமலை, வள்ளலார் திருச்சபை தலைவர் செயராமன்,மரம் நடுவோர் சங்கத்ச்சார்ந்த செல்வராஜ்,மகாராஜன், ஊர் முக்கியஸ்தர்கள்,பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.முன்னதாக காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்து அங்கிருந்த
அனைவருக்கும் .அடகு
அங்காடி செல்வராஜ் இனிப்பு வழங்கினார்.நெப்போலியன் மற்றும் சிவக்குமார்
நிகழ்வை சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர்.
இதேபோல் காலை,பல்வேறு
அமைப்புகள் சார்பில் காந்தி
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.ஆண்கள்,பெண்கள்
ஒன்றிய ஆரம்பப் பள் ளிகள்,அரசு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள்,ராஜா தேசிங்கு வித்யாலயா,சாரதாவித்யாலயா,சோபி
கான்வென்ட் ஆகிய பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சிமன்ற பெற்றோர் ஆசிரியர்
கழக, கிராம கல்வி குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,பள்ளிகளில் கலை நிகழ்சிகள்
நடைபெற்றன.
ஊராட்சிமன்றம்,காவல்நிலையம்,மின்சார வாரியம்,கிளைநூலகம்,பொது
இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு
தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.






No comments:
Post a Comment