Wednesday, March 13, 2019

ராகு,கேது பெயர்ச்சி


ராகு,கேது பெயர்ச்சி
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 13.2.19  புதன்கிழமை இரவு,ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.ராகுபகவான் கடக ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கும்,கேது பகவான், மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் மதியம் 1.25 மணிக்கு பெயர்ச்சி  அடைவதை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,நவகிரகங்களில்  ராகு, கேதுவிற்கு சிறப்பு அலங்காரமும் செய்விக்கப் பெற்றிருந்தன. தொடர்ந்து நவ கிரகங்களுக்கான கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது.யாககுண்டத்தில் அனைவரும் வரிசையாக வந்து வன்னி சமித்து,கொள்.கருப்பு உளுந்து தானியங்களை போட்டனர்.கலச நீர் நவ கிரகங்களுக்கு தெளித்தபின் அனைவருக்கும் தெளிக்கப்பட்டது. .ராகு,கேதுவின் அருட் பார்வை, 12 ராசிகளுக்கான பெயர்ச்சி பலன்கள் மற்றும் ஏற்ற வேண்டிய தீப எண்ணிக்கைகள் கூறப்பட்டன.பக்தர்களால் அத் தீபங்கள் ஏற்றப்பட்டன.சிறப்பு அர்ச்சனையும்மஹா தீபாராதனையும் நடை பெற்றன.இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு தரிசித்தனர். ராகு,கேது விற்கான உளுந்து,கொள்ளு சுண்டல்,மற்றும் பல பிரசாதங்கள் வழங்கப்பட்டன.வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய பௌர்ணமி அமாவாசைக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதே போன்று அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் இறைபணி மன்றம் சார்பில்  ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.மங்கலம் சாலையிலுள்ள பச்சை அம்மன் கோயிலிலும் ராகு,கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Tuesday, March 12, 2019

இலவசகண் பரிசோதனை முகாம்












இலவசகண் பரிசோதனை முகாம்  

மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் 2-3-19 சனிக்கிழமை காலை மணிமுதல் மதியம் 2 மணிவரை அங்காடிவீதியிலுள்ள ஆர்.ஏ.பி திருமணமண்டபத்தில், விழுப்புரம் மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம்,அவலூர்பேட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஏஜன்சீஸ், பெட்ரோல்பங்க்,ஸ்ரீ வரலட்சுமி ஸ்டோர்ஸ்,கன்னிகாபரமேஸ்வரி சூப்பர் மார்க்கெட் மற்றும் பாண்டிச்சேரி அரவிந் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது.பாண்டிச்சேரி அரவிந் கண் மருத்துவமனை,கண் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.இதில் பயனாளிகளின் பெயர் பதிவு முதல் அனைத்து பரிசோதனைகளும் கணினிகள் மூலம் நடைபெற்றன. கையடக்க மற்றும் மடிக்கணினிகள் பயன்படுத்தப்பட்டன.கண் புரை,சர்க்கரை நோய்நீர்அழுத்தம்,ரத்த அழுத்தம்,ரத்தபரிசோதனை கிட்டதூரப்பார்வை குறைபாடு, வெள்ளெழுத்து, கருவிழிப்புண், போன்றவற்றிற்கு சிகிச்சைஅளித்து மருந்துகள் வழங்கப்பட்டன.முகாமிற்கு வந்திருந்த சிறப்பு மருத்துவர்கள்,செவிலியர்கள்,குறைபாடு உள்ளவர்களை நன்கு பரிசோதித்து தேவையானவற்றை செய்தனர் மற்றும் அவலூர்பேட்டை லயன்ஸ், லயனஸ், லியோசங்கங்களின் தலைவர், செயலர்,பொருளர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு முகாம் சிறக்கச்செய்தனர் அவலூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் காலை முதலே நீண்ட வரிசயில் காத்திருந்தனர்.தரமானகண்ணாடிகள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டன. பரிசோதனை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 298 கண் அறுவை சிகிச்சைக்கு தகுதியான 88 நபர்கள் பாண்டிச்சேரி அரவிந்கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Sunday, February 24, 2019

"திருக்குறளின் பெருமைகள்"

20.2.19புதன்கிழமை காலை குறள் வீடு உறவுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற "திருக்குறளின் பெருமைகள்" பற்றிய சிறப்புரை.இடம்:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் மாம்பட்டு மேல் நிலைப்பள்ளி.

Sunday, February 17, 2019

காளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்


மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை,ஊரின் கிழக்கு எல்லையில் உள்ள காளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 10.2.19 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்ளாக சிறப்பாக நடைபெற்றது.இதைமுன்னிட்டு 9.2.19  காலை 8 மணிக்கு மங்கள இசை,அனுக்ஜை,கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமங்ககள்,நூதனபிம்பஅஷ்டாத கிரியை,கோபூஜை,சன்ய பூஜை தீபாராதனை,பிரசாதங்கள் வழங்குதல் நடைபெற்றன.மாலை 5 மணி வாஸ்த்து சாந்தி,பிரவேசபலிமிருத்சங்கிரகணம்,அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம்,கும்ப அலங்காரம்,காலகர்ஷணம்.இரவு 7 மணி முதல் கால யாகபூஜை,யந்திரஸ்தாபிதம்,நவரத்தினஸ்தாபிதம்,வேதபாராயணம்.இரவு 9 மணி பூர்ணாகுதி,மகா தீபாராதனை. அஷ்டபந்தன சர்பனம்,பிரசாதங்கள் வழங்குதல்.10.2.19 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு  மங்கள இசை,நாடி சந்தானம்,பர்சாஹூதி, 2 வது கால விசேஷ மூலிகை திரவியம் ஹோமங்கள், மகா பூர்ணாகுதி,மகா தீபாராதனை,மகா பூர்ணாகுதி,மகா தீபாராதனை,9.30 மணிக்கு தீர்த்த கும்ப புறப்பாடு.10.30 மணிக்கு காளி அம்மன்,காலபைரவர், வியாக்கியான தட்சணாமூர்த்தி,மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு கும்பாபிஷேகம்.மூலவர்,காலபைரவர்,தட்சணாமூர்த்தி கோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பகலச நீர் ஊற்றப்பட்டன.தொடந்து.மகா அபிஷேகம், அலங்காரம் செயப்பட்டு அர்சனைகள்செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும் ஐயப்பா சேவா சங்கம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன..உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை சீனுவாச குருக்கள் அவர்கள் தலமையில் சிவாச்சரியார்கள் ஆகமமுறைப்படி சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினர். இன்று முதல் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் என தெரிவித்தனர்.காவல்துறையினரின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது
                     மாலை 6 மணிக்குஅங்க்காடி வீதியில் ககுடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களா? ஆண்களா? என்ற தலைப்பில் நகைச்சுவைப் பட்டி மன்றம் நடைபெற்றது..நடுவர் ராமலிங்கம் அவர்கள்,.பெண்களே என்றதலைப்பில் செல்வி தாமரை அவர்கள்,ஆண்களே என்றதலைப்பில்பேராசிரியர் வேதா அவர்கள்,இரவு 8 மணிக்கு காளி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
                .விழா நிகழ்வுகளை தலைவர் ராமலிங்கம்,செயலர் நடராஜன்,பொருளர் கோபாலகிருஷ்ணன்,அர்ச்சகர் சரவணன்,விழாக்குழு மற்றும் கிராம பொது மக்கள்  முன்னின்று சிறப்புற செய்தனர்.

Friday, February 8, 2019

குடியரசு தினவிழா


குடியரசு தினவிழா
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை அங்காடி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு 26.1.19 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் சங்கம் சார்பில், ஸ்ரீ சரவணா நகைஅங்காடி பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் சங்கத்தலைவர் புருடோத்துமன் அவர்கள் தலைமை வகிக்க,70ஆம் ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் தமிழ் சங்க துணைசெயலர் சிவநேசன் ஆலோசகர் ஏழுமலை, வள்ளலார் திருச்சபை தலைவர் செயராமன்,மரம் நடுவோர் சங்கத்ச்சார்ந்த செல்வராஜ்,மகாராஜன், ஊர் முக்கியஸ்தர்கள்,பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.முன்னதாக காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்து அங்கிருந்த அனைவருக்கும் .அடகு அங்காடி செல்வராஜ் இனிப்பு வழங்கினார்.நெப்போலியன் மற்றும் சிவக்குமார் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர்.

        இதேபோல் காலை,பல்வேறு அமைப்புகள் சார்பில்  காந்தி சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.ஆண்கள்,பெண்கள் ஒன்றிய ஆரம்பப் பள் ளிகள்,அரசு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள்,ராஜா தேசிங்கு வித்யாலயா,சாரதாவித்யாலயா,சோபி கான்வென்ட் ஆகிய பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சிமன்ற பெற்றோர் ஆசிரியர் கழக, கிராம கல்வி குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,பள்ளிகளில் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.                 
                                  ஊராட்சிமன்றம்,காவல்நிலையம்,மின்சார வாரியம்,கிளைநூலகம்,பொது இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

வாரசந்தை ஏலம்


வாரசந்தை ஏலம்
மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் இன்று 7.2.19 வியாழக்கிழமை மதியம் 12.00 மணிக்கு  அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்,ஊரின் கிழக்கு எல்லையில் உள்ள பெரிய குளக்கரையில் புதன் கிழமைதோறும் நடந்து கொண்டிருக்கும் ஊராட்சியின் வார சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமத்திற்கான பகிரங்க ஏலம்,தனி அலுவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்நாதன், அவர்கள் தலமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், நடராஜன்,பிரியாசங்கர் {தணிக்கை},சேகர்,பாலசுப்பிரமணி,கிராம நிர்வாக அலுவலர், அவலூர்பேட்டை ஊராட்சி செயலர் வெங்கடேசன்,மற்றும் ஏலத்திற்கான பிணைத்தொகை செலுத்தியவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏலம் அமைதியாக நடைபெற, அவலூர்பேட்டை காவல் துறையினர் ஏலம் நடக்கும் இடத்தில் பாதுகாபில் பெருமளவில் ஈடுபட்டிருந்தனர்
 
                                     
                                      ஏலம் கேட்பதற்காக 14 நபர்கள் விதிமுறைகளின்படி ரூபாய் 1 லட்சத்திற்கான வரைவோலை கொடுத்திருந்தனர்.,ஏலத்திற்கான விதிமுறைகள்,சுங்க கட்டணங்கள் பற்றி கூறியபின்,ஏலத்தின்மூலம் ஊராட்சிக்கு கிடைக்கும் தொகையை ஊரின் அத்தியாச தேவைகளுக்கு செலவுசெய்ய வேண்டும் எனவும் சந்தையில் கடைகள் வைப்பதற்காக கட்டப்பட்ட மேடையில் கடைகள்ம் வைக்காமல் சாலையின் இரு மருங்கிலும் பொக்குவரத்துக்கு இடையூராக கடைகள் வைக்கப்படுகின்றன என கேட்கப்பட்டது.இதன்மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.மதியம் 12.00 மணிக்கு ஏலம் துவங்கியது அரசு மதிப்பு 25 லட்சம் என அறிவித்து ஏலம் துவங்கி 14 பேர் தொகை உயர்த்திக்கொண்டேவர கோவில்புரையூர் பள்ள ஊர் பச்சையப்பன் என்பவர் 32 லட்சத்து 15 ஆயிரம் என கேட்க வேறு கேள்வி இல்லாததால் நடப்பாண்டிற்கான சுங்கம் வசூலிக்கும் உரிமம்,அன்னாருக்கே என,அரசு விதித்த கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கமாட்டேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று,ஏலத்தொகை ஜி எஸ் டி வரி 18 சதவீதத்துடன் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்டது.ஏலத்தொகை கடந்த ஆண்டைவிட 3 லட்சத்து 2 ஆயிரம் அதிகம். கடந்த ஆண்டு சந்தை ஏலம் 29 லட்சத்து 13 ஆயிரம். அவலூர்பேட்டையில் வாரந்தோறும் புதன் கிழமை நடைபெறும்,கால் நடைகளுக்கான சந்தை மிகப்பிரபலமானது.காய்கறிகள் வாங்க காலை முதல் இரவு 8 மணிவரை நீண்ட தொலை கிராமங்களிலிருந்து திருவிழாவிற்கு வந்து செல்வதுபோல் வருவர் என்பதும் ஒரு சிறப்பு.